TNPSC Thervupettagam

NEEDS திட்டத்தின் கீழ் மூலதன மானியம்

August 30 , 2023 454 days 300 0
  • தமிழக மாநில அரசானது அதன் முதன்மையான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் 2022-23 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கான அதிகளவிலான மூலதன மானியத்தை வழங்கியுள்ளது.
  • இது முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக மாநில அரசினால் நிதியளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
  • மாநில அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையால் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
  • 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 97.25 கோடி ரூபாயாக வழங்கப்பட்ட மானியமானது, 2022-23 ஆம் ஆண்டில் 163.88 கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டம், 2022-23 ஆம் ஆண்டில் முதன்முறையாக 1,000க்கும் மேற்பட்ட மானியம் வழங்கல்களைப் பதிவு செய்தது.
  • இத்திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான குறைந்தபட்சத் திட்டச் செலவினம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சத் திட்டச் செலவினம் 5 கோடி ரூபாய் வரை ஆகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர் அடிப்படையிலான மூலதன மானியம் ஆனது திட்ட மதிப்பீட்டில் 25% (75 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்) வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்