நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் கிடையக முறையின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ளக இட ஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆணையமானது ஓய்வுபெற்ற நீதிபதியான கலையரசன் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
கல்வித்துறையில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/பொதுப் பிரிவினர்களுக்கு இருக்கும் செங்குத்து இடஒதுக்கீட்டிற்குள் கிடையக இடஒதுக்கீடானது நன்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.