வங்கி நேர நிதிப் பரிமாற்றத்திற்கு அப்பால் நிதிப் பரிமாற்றத்திற்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற (NEFT - National Electronic Funds Transfer) வசதியை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
NEFT என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் ஒரு மின்னணு நிதிப் பரிமாற்ற அமைப்பாகும்.
இந்த முறையானது வங்கித் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (Institute for Development and Research in Banking Technology - IDRBT) நிறுவப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றது.
NEFT ஆனது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என்ற அடிப்படையில் NEFTவசதி செயல்படுத்தப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையில் மின்னணுச் செய்தி அனுப்புதல் மூலம் நிதியை மாற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றது.