இந்திய அரசானது, ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்விக்கான (ECCE) தேசியப் பாடத் திட்டத்தையும், குழந்தைப் பருவ ஊக்குவிப்பிற்கான ஒரு தேசியக் கட்டமைப்பையும் அறிமுகப் படுத்துகிறது.
ECCE ஆனது மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வி நிலையை உள்ளடக்கியது ஆகும் என்பதோடு NFECS ஆனது பிறந்தது முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆரம்பகாலக் குழந்தைப் பருவ (ஊக்குவிப்பு) தூண்டுதலுடன் தொடர்புடையது.
இந்த முன்னெடுப்புகளானது குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளின் முக்கியப் பங்கை அங்கீகரித்து அதன் மூலம் இந்தியாவின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக் கட்டமைப்பினை வலுப்படுத்த முயல்கின்றன.
NECCE ஆனது 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி நிலையில் கவனம் செலுத்துவதோடு, "விளையாட்டு மிக்க மகிழ்ச்சியுடனான கற்றல் முறையில்" கவனம் செலுத்துகிறது.
NFECS ஆனது, மையம் மற்றும் இல்லம், உட்புற மற்றும் வெளிப்புற, குழந்தைகள் தலைமையிலான மற்றும் கல்வியாளர் தலைமையிலான மற்றும் வலுவான மதிப்பீட்டு கருவிகள் உள்ளிட்டச் செயல்பாடுகளின் கலவையைக் கொண்ட செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது.