TNPSC Thervupettagam

NFECS மற்றும் NECCE அறிமுகம்

March 17 , 2024 256 days 236 0
  • இந்திய அரசானது, ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்விக்கான (ECCE) தேசியப் பாடத் திட்டத்தையும், குழந்தைப் பருவ ஊக்குவிப்பிற்கான ஒரு தேசியக் கட்டமைப்பையும் அறிமுகப் படுத்துகிறது.
  • ECCE ஆனது மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வி நிலையை உள்ளடக்கியது ஆகும் என்பதோடு NFECS ஆனது பிறந்தது முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆரம்பகாலக் குழந்தைப் பருவ (ஊக்குவிப்பு) தூண்டுதலுடன் தொடர்புடையது.
  • இந்த முன்னெடுப்புகளானது குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளின் முக்கியப் பங்கை அங்கீகரித்து அதன் மூலம் இந்தியாவின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக் கட்டமைப்பினை வலுப்படுத்த முயல்கின்றன.
  • NECCE ஆனது 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி நிலையில் கவனம் செலுத்துவதோடு, "விளையாட்டு மிக்க மகிழ்ச்சியுடனான கற்றல் முறையில்" கவனம் செலுத்துகிறது.
  • NFECS ஆனது, மையம் மற்றும் இல்லம், உட்புற மற்றும் வெளிப்புற, குழந்தைகள் தலைமையிலான மற்றும் கல்வியாளர் தலைமையிலான மற்றும் வலுவான மதிப்பீட்டு கருவிகள் உள்ளிட்டச் செயல்பாடுகளின் கலவையைக் கொண்ட செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்