TNPSC Thervupettagam
January 28 , 2021 1307 days 684 0
  • இந்திய வானியற்பியல் நிறுவனமானது (Indian Institute of Astrophysics - IIA) நமது பால்வெளி மண்டலத்தின் மிகப்பெரிய உருண்டை வடிவத் தொகுப்பில் ஒரு அரிய வெப்பமான புற ஊதா நிற பிரகாசமிகு நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இது UVIT என்ற தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.
  • UVIT என்பது புறஊதா படத் தொலைநோக்கி (Ultra Violet Imaging Telescope) என்பதைக் குறிக்கின்றது.
  • இது ஆஸ்ட்ரோசாட் என்ற செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது.
  • ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலை நீளம் கொண்ட ஒரு வான்வெளி செயற்கை கோளாகும்.
  • புற ஊதா படத் தொலைநோக்கி என்பது மூன்றில் ஒன்றாக உள்ள படத் தொழில் நுட்பமாகும்.
  • இது புறஊதாவிற்கு அருகிலுள்ள, புலப்படக் கூடிய மற்றும் புற ஊதாவிற்கு அப்பால் உள்ள அலைநீளங்களை ஆய்வு செய்யும்.
  • NGC 2808 ஆனது குறைந்தது 5 தலைமுறை நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் என்று நம்பப் படுகின்றது.
  • IIA என்பது இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்