இந்திய வானியற்பியல் நிறுவனமானது (Indian Institute of Astrophysics - IIA) நமது பால்வெளி மண்டலத்தின் மிகப்பெரிய உருண்டை வடிவத் தொகுப்பில் ஒரு அரிய வெப்பமான புற ஊதா நிற பிரகாசமிகு நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளது.
இது UVIT என்ற தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.
UVIT என்பது புறஊதா படத் தொலைநோக்கி (Ultra Violet Imaging Telescope) என்பதைக் குறிக்கின்றது.
இது ஆஸ்ட்ரோசாட் என்ற செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலை நீளம் கொண்ட ஒரு வான்வெளி செயற்கை கோளாகும்.
புற ஊதா படத் தொலைநோக்கி என்பது மூன்றில் ஒன்றாக உள்ள படத் தொழில் நுட்பமாகும்.
இது புறஊதாவிற்கு அருகிலுள்ள, புலப்படக் கூடிய மற்றும் புற ஊதாவிற்கு அப்பால் உள்ள அலைநீளங்களை ஆய்வு செய்யும்.
NGC 2808 ஆனது குறைந்தது 5 தலைமுறை நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் என்று நம்பப் படுகின்றது.
IIA என்பது இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.