NGT – மீன்பிடியின் போது ஆமைகள் தப்பிக்க உதவும் சாதனங்கள்
February 3 , 2025 19 days 98 0
சென்னை மற்றும் செங்கல்பட்டு கடற்கரைகளில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் / சிற்றாமைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்வு ஆனது தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.
மீன்பிடிப்பின்ன் போது மீன்பிடி வலைகளில் ஆமைகள் தப்பிக்க வழி வகை செய்யும் சாதனங்கள் (TEDs) எதுவும் கிடைக்கப் பெறாததால் அவற்றைப் பயன்படுத்துவதை அமல்படுத்துவது தற்போது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மீன்வளத் துறை அந்த அமர்வுக்குத் தெரிவித்துள்ளது.
ஆமைகளின் இறந்த உடல்கள் ஆந்திரப் பிரதேச மாநிலக் கடற்கரையிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டது.
இதனைத் தெளிவுபடுத்துவதற்கு, மீன்வளத் துறை மற்றும் ஆந்திரப் பிரதேச முதன்மை தலைமை வன வளங்காப்பாளர் ஆகியோர் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஐந்த அமர்வு உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டின் ஒரு அரசாணையானது, நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஆமைகளின் வலையமைக்கும் காலத்தில் அனைத்து இழுவை வலைகளிலும் TED சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
கூடுதலாக, 2016 ஆம் ஆண்டு அரசாணையானது தமிழ்நாட்டில் ஆமைகளின் இனப் பெருக்க காலத்தில் அவை வலையமைக்கும் இடங்களிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பதற்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் விசையாழிகள் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.