கோவிட் – 19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகளினால் ஒரு புதிய தொழில்நுட்பமானது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது புனேவில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருளானது “சைடெக் ஏரோன்” (Scitech Airon) என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது ஒரு எதிர் அயனி ஆக்கி (உற்பத்தி) ஆகும்.
இந்தத் தொழில்நுட்பமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் தொடங்கப்பட்டுள்ள நிதி பிரயாஸ் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்தப் பட்டுள்ளது.
இந்த சைடெக் ஏரோன் அயனியாக்க இயந்திரமானது 8 வினாடிகளுக்கு ஏறத்தாழ 100 மில்லியன் (1 வினாடிக்கு 10 அயனிகள்) எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகளை உற்பத்தி செய்கின்றது.
இந்த அயனியாக்கத்தினால் உற்பத்தி செய்யப்படும் எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகள் காற்றில் பரவும் துகள்கள், கொரானா அல்லது இன்புளூயன்சா வைரஸ், சிலந்தி ஒவ்வாமை, பாக்டீரியா, மகரந்தம், மாசுக்கள் போன்ற நுண்துகள்களைச் சுற்றி ஒரு தொகுப்பை உருவாக்குகின்றன.
இந்த எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகள் “ஹைட்ராக்ஸில் ரேடிக்கல்ஸ் மற்றும் எச் ஓ” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பாக எதிர்வினையாற்றும் OH என்ற குழுவை உருவாக்குவதன் மூலம் நிகழும் இரசாயன எதிர்வினையின் மூலம் அவற்றிற்குச் செயல்படாத ஒரு தன்மையை வழங்குகின்றன.
இவை ஒரு சிறந்த எதிர்வினையாற்றி ஆகும். இது வளிமண்டல தூய்மைப் பொருள் என்று அழைக்கப்படுகின்றது.
அயனியாக்கியால் உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் தூய்மை செய்யும் பண்பானது ஒவ்வாமை, வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றின் வெளிப்புற புரதத்தை உடைக்க உதவுகின்றது. இவை காற்றில் பரவும் நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இது தொற்று நோய் மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய சுற்றுச்சூழல் காரணிகளிடமிருந்து உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
இந்த எதிர்ப்புச் சக்தியானது அயனி இல்லாத சூழ்நிலையில் அடுத்த 20 – 30 நாட்களுக்கு உதவியாக இருக்கக் கூடும்.
மேலும் இது கார்பன் மோனாக்சைடு (கார்பன்-டை-ஆக்ஸைடை விட 1000 மடங்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியது), நைட்ரஜன் டை ஆக்ஸைடு, எளிதில் ஆவியாகின்ற கரிம வேதிப் பொருட்கள் போன்ற காற்று மாசுபாடுகளை போக்குகின்றது.
இந்தத் தொழில்நுட்பமானது சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது. இது காற்றைத் தூய்மையாக்கி, கோவிட் – 19 பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களின் வசிப்பிடப் பகுதிகளைத் தூய்மையாக்க உதவுகின்றது.
இதுபற்றி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது புத்தாக்கவியலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்காக காப்பக மையங்களை அமைத்தல், நிதியைத் திரட்டுதல், செயல்படுத்துபவர்கள் மற்றும் கருத்தாக்கத்திற்கான ஆதாரம் ஆகியவற்றிற்கு நிதியளிக்கும் திட்டத்தின் கீழ் நிதி (NIDHI/National Initiative for Developing and Harnessing Innovations – புத்தாக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் திரட்டுதலுக்கான தேசிய முன்னெடுப்பு) என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
NIDHI திட்டத்தின் கீழ், பிரயாஸ் (PRAYAS/Promoting and Accelerating Young and Aspiring innovators & Startupsஇளம் மற்றும் ஆர்வமுள்ள புத்தாக்காக்கவியலாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.