இந்தியத் தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளையானது (NIF) மார்ச் 01 ஆம் தேதியன்று அதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தைத் தொடங்கியது.
NIF நூற்றுக்கணக்கான NIF-ஆதரவு நிறுவனங்களுக்கும் 25க்கும் மேற்பட்ட அடிமட்டப் புத்தொழில் நிறுவனங்களுக்கும் உதவுகிறது, அவற்றில் சில ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையை மேற்கொள்கின்றன.
2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த NIF ஆனது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன், சில அடித்தளக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவை ஊக்குவிக்கிறது.