TNPSC Thervupettagam

NIIF – ADIA முதல் முதலீட்டு ஒப்பந்தம்

October 18 , 2017 2596 days 861 0
  • தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கு (National Investment And Infrastructure Fund) நீண்டகால முதலீடுகளை திரட்டும் பொருட்டு, முதல் முதலீட்டு ஒப்பந்தம் அபுதாபி முதலீட்டு ஆணையத்திற்குச் சொந்தமான துணை நிறுவனத்திற்கும் (ADIB-ABUDHABI investment Authority), NIIF முதன்மை நிதி (Master Fund) இடையே கையெழுத்திடப்பட்டது.
  • இந்த உடன்படிக்கையின் படி ADIA ஆனது NIIF ன் Master Fund ல் முதல் நிறுவன முதலீட்டாளர் ஆவார். மேலும் NIIFன் முதலீட்டு நிறுவனத்தில் முதல் பங்குதாரர் ஆவார்.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF)
  • மத்திய அரசு தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவர்வதற்காக முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியை 2015ல் நிறுவியது.
  • இது செபியின் விதிமுறைகளின் கீழ் மாற்று முதலீட்டு நிதிகளில் இரண்டாவது பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் இறையாண்மையுடைய செல்வநிதி என்றும் இதன் கீழ் உள்ள ஏராளமான நிதித் திட்டங்களுக்கு இது ஒரு குடைபோல் தலைமைநிதியாக செயல்படும் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்