தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கு (National Investment And Infrastructure Fund) நீண்டகால முதலீடுகளை திரட்டும் பொருட்டு, முதல் முதலீட்டு ஒப்பந்தம் அபுதாபி முதலீட்டு ஆணையத்திற்குச் சொந்தமான துணை நிறுவனத்திற்கும் (ADIB-ABUDHABI investment Authority), NIIF முதன்மை நிதி (Master Fund) இடையே கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் படி ADIA ஆனது NIIF ன் Master Fund ல் முதல் நிறுவன முதலீட்டாளர் ஆவார். மேலும் NIIFன் முதலீட்டு நிறுவனத்தில் முதல் பங்குதாரர் ஆவார்.
தேசியமுதலீடுமற்றும்உள்கட்டமைப்புநிதி (NIIF)
மத்திய அரசு தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவர்வதற்காக முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியை 2015ல் நிறுவியது.
இது செபியின் விதிமுறைகளின் கீழ் மாற்று முதலீட்டு நிதிகளில் இரண்டாவது பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் முதல் இறையாண்மையுடைய செல்வநிதி என்றும் இதன் கீழ் உள்ள ஏராளமான நிதித் திட்டங்களுக்கு இது ஒரு குடைபோல் தலைமைநிதியாக செயல்படும் எனவும் கூறப்படுகின்றது.