TNPSC Thervupettagam

NIPCCD அமைப்பின் நிர்வாகக் குழு

August 15 , 2024 103 days 129 0
  • மத்திய அரசானது, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியப் பொது கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப் கல்வி நிறுவனத்தின் (NIPCCD) நிர்வாகக் குழு மற்றும் பொதுக் குழுவை மறுசீரமைத்துள்ளது.
  • NIPCCD ஆனது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பு ஆகும்.
  • இது ஆரம்பத்தில் 1966 ஆம் ஆண்டில் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் XXI என்பதின் கீழ் நிறுவப்பட்டது.
  • இந்த மறுசீரமைப்பு என்பது 94 என்ற அளவாக இருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 22 ஆகவும், 21 ஆக இருந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 13 ஆகவும் குறைத்துள்ளது.
  • பொதுக்குழுவானது ஒட்டு மொத்தக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், நிர்வாகக் குழு நிறுவனத்தின் நிர்வாக விவகாரங்களை நிர்வகிக்கின்றப் பொறுப்பினையும் வகிக்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்