மத்திய அரசானது, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியப் பொது கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப் கல்வி நிறுவனத்தின் (NIPCCD) நிர்வாகக் குழு மற்றும் பொதுக் குழுவை மறுசீரமைத்துள்ளது.
NIPCCD ஆனது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பு ஆகும்.
இது ஆரம்பத்தில் 1966 ஆம் ஆண்டில் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் XXI என்பதின் கீழ் நிறுவப்பட்டது.
இந்த மறுசீரமைப்பு என்பது 94 என்ற அளவாக இருந்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 22 ஆகவும், 21 ஆக இருந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 13 ஆகவும் குறைத்துள்ளது.
பொதுக்குழுவானது ஒட்டு மொத்தக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், நிர்வாகக் குழு நிறுவனத்தின் நிர்வாக விவகாரங்களை நிர்வகிக்கின்றப் பொறுப்பினையும் வகிக்க உள்ளன.