TNPSC Thervupettagam

NIPUN மின்னணு தளம் மூலம் டெல்லி காவல்துறைக்குப் பயிற்சி

November 17 , 2018 2200 days 680 0
  • காவல்துறையினருக்குப் பயிற்சியளிப்பதற்கும் உடனுக்குடனான தகவல்களை வழங்குவதற்கும் என்று டெல்லி காவல்துறையானது “நிபுண்” என்ற மின்னணு கற்றல் தளத்தை தொடங்கியுள்ளது.
  • ஆன்லைனில் கிடைக்கும் சிறப்பு படிப்புகள் மூலமாக காவல்துறைப் பணியாளர்களுக்கு பணி சம்பந்தப்பட்ட ஆன்லைன் பயிற்சிகள் மற்றும் தகவல்களை அளிப்பதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆன்லைன் தளத்தின் படிப்புகளானது, கூட்டுமுயற்சி கற்றல் மற்றும் கூட்டுப் பங்காண்மைத் திட்டத்தின் (The Collaborative Learning and Partnership - CLAP) கீழ் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), FICCI, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஜானகி தேவி நினைவுக் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • டெல்லி காவல்துறைக்காக குறிப்பிட்ட படிப்புகளை உருவாக்க டெல்லி சட்ட சேவை ஆணையமும் ஒப்புக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்