NISAR செயற்கைக்கோள் ஒப்படைப்பு
March 13 , 2023
625 days
351
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது அமெரிக்க விண்வெளி நிறுவனத்திடமிருந்து நாசா-இஸ்ரோ SAR (நிசார்) செயற்கைக் கோளினைப் பெற்று உள்ளது.
- NISAR என்பது நாசா மற்றும் இஸ்ரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய புவித் தாழ்மட்டச் சுற்றுப்பாதை ஆய்வுக் கலம் ஆகும்.
- இந்தச் செயற்கைக்கோள் ஆனது 2024 ஆம் ஆண்டில் துருவச் சுற்று வட்டப் பாதைக்கு அருகில் நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- NISAR ஆனது L மற்றும் S இரட்டை அலைநீளங்களைக் கொண்ட, புவி மேற்பரப்பினைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் (SAR) ரேடாரினைச் சுமந்து செல்கிறது.
- இஸ்ரோவின் கூற்றுப் படி, NISAR செயற்கைக்கோளானது புவியின் முழு பரப்பினையும் வெறும் 12 நாட்களில் படம் பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
351