TNPSC Thervupettagam

NISAR செயற்கைக்கோள் ஒப்படைப்பு

March 13 , 2023 625 days 350 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது அமெரிக்க விண்வெளி நிறுவனத்திடமிருந்து நாசா-இஸ்ரோ SAR (நிசார்) செயற்கைக் கோளினைப் பெற்று உள்ளது.
  • NISAR என்பது நாசா மற்றும் இஸ்ரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய புவித் தாழ்மட்டச் சுற்றுப்பாதை ஆய்வுக் கலம் ஆகும்.
  • இந்தச் செயற்கைக்கோள் ஆனது 2024 ஆம் ஆண்டில் துருவச் சுற்று வட்டப் பாதைக்கு அருகில் நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • NISAR ஆனது L மற்றும் S இரட்டை அலைநீளங்களைக் கொண்ட, புவி மேற்பரப்பினைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் (SAR) ரேடாரினைச் சுமந்து செல்கிறது.
  • இஸ்ரோவின் கூற்றுப் படி, NISAR செயற்கைக்கோளானது புவியின் முழு பரப்பினையும் வெறும் 12 நாட்களில் படம் பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்