TNPSC Thervupettagam

NITIE - IIM மும்பை

August 14 , 2023 343 days 231 0
  • மும்பையின் தேசியத் தொழில்துறை பொறியியல் கல்வி நிறுவனமானது (NITIE) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஆதரவுடன் 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM) மும்பை என்ற நிறுவனமாக தயாராகி வருகிறது.
  • இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் NITIE மும்பை ஆனது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), மும்பை என மறு பெயரிடப் பட உள்ளது.
  • இதன் மூலம், மும்பையின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM) ஆனது நாட்டின் 21வது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆக திகழும்.
  • முதல் இரண்டு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களான, கல்கத்தா இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், மற்றும் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவை முறையே 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் நிறுவப்பட்டன.
  • பல ஆண்டுகளாக 1973 ஆம் ஆண்டில் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், 1984 ஆம் ஆண்டில் லக்னோ இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், 1996 ஆம் ஆண்டில் கோழிக்கோடு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் இந்தூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், 2007 ஆம் ஆண்டில் ஷில்லாங் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், மற்றும் 2010 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், ராஞ்சி இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், மற்றும் ரோத்தக் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், உள்ளிட்ட பல இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் நிறுவப் பட்டுள்ளன.
  • சமீபத்தில் உருவாக்கப்பட்ட இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், மற்றும் உதய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் என்ற நிலையில் மேலும் தற்போது 2023 ஆம் ஆண்டில் மும்பை இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்