TNPSC Thervupettagam

NMCG இயக்கத்தின் 58வது செயற்குழுக் கூட்டம்

November 26 , 2024 39 days 65 0
  • தேசியத் தூய்மை கங்கை இயக்கத்தின் (NMCG) 58வது செயற்குழு கூட்டம் ஆனது பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டங்கள் ஆனது கங்கை நதி மற்றும் அதன் நீர்வாழ் உயிரினங்களின் வளங் காப்பிற்கான மிக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • கங்கை நதி ஓங்கில்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி, ‘கங்கை நதி ஓங்கில்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மேம்படுத்தப் பட்ட மீட்பு அமைப்புத் திட்டத்திற்கு’ ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
  • ஆபத்தில் இருக்கும் ஓங்கில்களுக்கு உதவ, ‘ஓங்கில் ஆம்புலன்ஸ்’ என்ற சிறப்பு மீட்பு வாகனத்தை அறிமுகப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "ராக்-ராக் மேன் கங்கா - ஏக் ஜீவன் தாரா" என்ற ஒரு பயண தொகுப்புத் தொடரின் மூன்றாவது வெளியீட்டிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்திற்குப் பதிலாக (NRGBA) தேசிய கங்கை சபையானது நிறுவப்பட்டது.
  • NMCG என்பது தேசிய கங்கை சபையின் அமலாக்கப் பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்