தேசியத் தூய்மை கங்கை இயக்கத்தின் (NMCG) 58வது செயற்குழு கூட்டம் ஆனது பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் ஆனது கங்கை நதி மற்றும் அதன் நீர்வாழ் உயிரினங்களின் வளங் காப்பிற்கான மிக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கங்கை நதி ஓங்கில்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி, ‘கங்கை நதி ஓங்கில்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மேம்படுத்தப் பட்ட மீட்பு அமைப்புத் திட்டத்திற்கு’ ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆபத்தில் இருக்கும் ஓங்கில்களுக்கு உதவ, ‘ஓங்கில் ஆம்புலன்ஸ்’ என்ற சிறப்பு மீட்பு வாகனத்தை அறிமுகப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
"ராக்-ராக் மேன் கங்கா - ஏக் ஜீவன் தாரா" என்ற ஒரு பயண தொகுப்புத் தொடரின் மூன்றாவது வெளியீட்டிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்திற்குப் பதிலாக (NRGBA) தேசிய கங்கை சபையானது நிறுவப்பட்டது.
NMCG என்பது தேசிய கங்கை சபையின் அமலாக்கப் பிரிவாகும்.