நாசாவின் தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (NOAA) திட்டத்திற்கான நான்காவது மற்றும் இறுதி செயற்கைக் கோளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
GOES-R என்பது (புவி நிலைச் செயல்பாட்டு சுற்றுச்சூழல் சார் செயற்கைக்கோள்) எனப்படும் மேம்பட்ட செயற்கைக்கோள்களின் தொடர் ஆகும்.
"மேற்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதி முழுவதும் நிலவும் வானிலை மற்றும் அபாயகரமான சுற்றுச்சூழல் நிலைமைகள் பற்றிய தொடர்ச்சியான கண்காணிப்பு" மூலம் அவை உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.