இந்தியாவின் தேசியப் பண வழங்கீடுகள் நிறுவனமானது (National Payments Corporation of India - NPCI) ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகத்தின் (UPI – Unified Payment interface) மேம்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகம் 2.0-ஐத் தொடங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகம் 2.0-ல் உள்ள அம்சங்களாவன:
பயனர் வியாபாரிக்கு பணம் செலுத்துவதற்கு முன்பாக வியாபாரி அனுப்பிய விலைப் பட்டியலை சரிபார்க்க முடியும்.
பயனர் ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகத்துடன் மிகைப்பற்று கணக்கை இணைக்க முடியும்.
பயனர் ஒரேயொரு முறை பயன்படுத்தக் கூடிய ஆணைகளை உருவாக்க முடியும். பயனர் பின் தேதியில் பண வழங்கீடுகளுக்காக பரிமாற்றங்களின் முன் அங்கீகாரத்தைப் பெற முடியும்.
பயனர் கையெழுத்திடப்பட்ட QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பண வழங்கீட்டை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் QR சேதமடைவதைத் தடுக்க முடியும்.
UPI என்பது ஒரு குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு வங்கிக் கணக்குகளையும் ஒற்றைக் கைபேசிச் செயலி மூலம் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். UPI என்பது பணவழங்கீடுகள் அமைப்பு ஆகும்.
ஏப்ரல் 2016-ல் இந்தியாவின் தேசிய பண வழங்கீடுகள் நிறுவனம் UPI-ஐ தொடங்கியது.