TNPSC Thervupettagam
August 17 , 2018 2291 days 776 0
  • இந்தியாவின் தேசியப் பண வழங்கீடுகள் நிறுவனமானது (National Payments Corporation of India - NPCI) ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகத்தின் (UPI – Unified Payment interface) மேம்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகம் 2.0-ஐத் தொடங்கியுள்ளது.
  • ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகம் 2.0-ல் உள்ள அம்சங்களாவன:
    • பயனர் வியாபாரிக்கு பணம் செலுத்துவதற்கு முன்பாக வியாபாரி அனுப்பிய விலைப் பட்டியலை சரிபார்க்க முடியும்.
    • பயனர் ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகத்துடன் மிகைப்பற்று கணக்கை இணைக்க முடியும்.
    • பயனர் ஒரேயொரு முறை பயன்படுத்தக் கூடிய ஆணைகளை உருவாக்க முடியும். பயனர் பின் தேதியில் பண வழங்கீடுகளுக்காக பரிமாற்றங்களின் முன் அங்கீகாரத்தைப் பெற முடியும்.
    • பயனர் கையெழுத்திடப்பட்ட QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பண வழங்கீட்டை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் QR சேதமடைவதைத்  தடுக்க முடியும்.
  • UPI என்பது ஒரு குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு வங்கிக் கணக்குகளையும்  ஒற்றைக் கைபேசிச் செயலி மூலம் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். UPI என்பது பணவழங்கீடுகள் அமைப்பு ஆகும்.
  • ஏப்ரல் 2016-ல் இந்தியாவின் தேசிய பண வழங்கீடுகள் நிறுவனம் UPI-ஐ  தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்