TNPSC Thervupettagam
April 9 , 2018 2423 days 739 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health and Family Welfare) கூடுதல் செயலாளராக பணிபுரிந்து வரும்  ராகேஷ் குமார் வாட்ஸ் அவர்களுக்கு மருந்துப் பொருள்களின் விலை ஒழுங்கு முறைப்படுத்து அமைப்பான  தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் (National Pharmaceutical Pricing Authority - NPPA)   தலைவராக கூடுதல் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின்   தலைவராக பணியாற்றி வந்த  புபேந்திரசிங்  கேபினேட் செயலகத்தின் கீழ் செயல்படும்  வேதியியல் இரசாயன  ஆயுதங்கள் உடன்படிக்கைக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக (National Authority for Chemical Weapons Convention) நியமிக்கப்பட்டுள்ளதால் அப்பதவிக்கு தற்போது ராகேஷ் குமார் வாட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்-NPPA

  • தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையமானது மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.
  • இது 1997ல் அமைக்கப்பட்டது.
  • மருந்துப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யவும், அவற்றின் விலையை மறுஆய்வு செய்யவும், மத்திய மருந்துப் பொருட்கள் துறையின் நெறிமுறைகளை செயல்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலை நிலவரங்களை கண்காணித்திடவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்