NPS மற்றும் APY திட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து
September 7 , 2023 444 days 343 0
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் (APY) ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளன.
இத்திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 66.2 மில்லியனை (6.62 கோடி) எட்டியுள்ளது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) தனியார், அடல் ஓய்வூதிய திட்டம் (APY), மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) லைட் ஆகியவற்றின் கீழான மொத்த நிதிகள் முறையே ரூ.47,663 கோடி, ரூ.30,051 கோடி மற்றும் ரூ.5,157 கோடி ஆகும்.
2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு இத்திட்டத்தில் இணைக்கப் பட்ட ஆயுதப்படை வீரர்களைத் தவிர, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தினைப் பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி முதல், அனைத்து இந்தியக் குடிமக்களும் தானாக முன் வந்து பயன் பெறும் வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று, அடல் ஓய்வூதியத் திட்டம் தொடங்கப் பட்டது.
இது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வரம்பையும் செயல்திறனையும் கணிசமான அளவில் உயர்த்தியுள்ளது.
தற்போது, இதில் இணைவதற்கு வரி செலுத்தாத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது.