TNPSC Thervupettagam

NQAS மதிப்பீடு

July 12 , 2024 138 days 149 0
  • மத்திய அரசானது, ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் (AAM) துணை மையங்களுக்கு மெய்நிகர் NQAS மதிப்பாய்வினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
  • இது நேரம் மற்றும் செலவினச் சேமிப்புக்கு ஏற்ற ஒரு நடவடிக்கையாக பொது சுகாதார மையங்களுக்கான தர உத்தரவாதக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத் தக்க புதுமையைப் பிரதிபலிக்கும்.
  • இந்த அமைப்பின் மூலம், மெய்நிகர் வழியில் மதிப்பிடப்பட்டச் சுகாதார AAM-SC மையங்களுக்கு NQAS (தேசிய தர உத்திரவாத தரநிலைகள்) சான்றிதழ் வழங்கப்படும்.
  • இந்தியப் பொது சுகாதாரத் தரநிலைகள் (IPHS) வழிகாட்டுதல்கள் ஆனது 2007 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதோடு, இது 2022 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட புதுப்பித்தலுடன் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.
  • இது ஆரம்ப நிலை முதல் இரண்டாம் நிலை வரையிலான பொது சுகாதார மையங்களுக்கான தர அளவுருக்களை நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்