மத்திய அரசானது, ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் (AAM) துணை மையங்களுக்கு மெய்நிகர் NQAS மதிப்பாய்வினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இது நேரம் மற்றும் செலவினச் சேமிப்புக்கு ஏற்ற ஒரு நடவடிக்கையாக பொது சுகாதார மையங்களுக்கான தர உத்தரவாதக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத் தக்க புதுமையைப் பிரதிபலிக்கும்.
இந்த அமைப்பின் மூலம், மெய்நிகர் வழியில் மதிப்பிடப்பட்டச் சுகாதார AAM-SC மையங்களுக்கு NQAS (தேசிய தர உத்திரவாத தரநிலைகள்) சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தியப் பொது சுகாதாரத் தரநிலைகள் (IPHS) வழிகாட்டுதல்கள் ஆனது 2007 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதோடு, இது 2022 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட புதுப்பித்தலுடன் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.
இது ஆரம்ப நிலை முதல் இரண்டாம் நிலை வரையிலான பொது சுகாதார மையங்களுக்கான தர அளவுருக்களை நிர்ணயித்துள்ளது.