மிக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தினைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஊதியங்களை திருத்தியமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சப்தகிரி சங்கர் உலகா தலைமையிலான கிராமப்புற மேம்பாட்டுக்கான பாராளுமன்ற நிலைக் குழுவானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதிய விகிதங்களை நிர்ணயிக்கக் கோரியுள்ளது.
தற்போது, நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கு சுமார் 234 ரூபாய் என்ற வீதம் முதல் ஹரியானா மற்றும் சிக்கிம் ஆகிய சில மாநிலங்களில் 374 ரூபாய் என்ற அளவிலும் ஊதிய வழங்கீடு வேறுபடுகிறது.
இந்தக் குழுவின் அறிக்கையின்படி, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை, நிலுவையில் உள்ள மொத்தத் தொகை 23,446.27 கோடி ரூபாயாக இருந்தன, இதில் 12,219.18 கோடி ரூபாய் ஊதிய நிலுவைத் தொகையும் அடங்கும்.
மேற்கு வங்காளம் ஆனது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து MGNREGA திட்ட நடவடிக்கைகளுக்கான நிதியினைப் பெறவில்லை.
2005 ஆம் ஆண்டு MGNREGA சட்டத்தின் 27வது பிரிவினைச் செயல்படுத்தி, மத்திய அரசானது அந்த நிதியை முடக்கியுள்ளது.
இந்தப் பிரிவு ஆனது, இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் விதிகளை மீறினால் நிதி வழங்கீட்டினை நிறுத்த அனுமதிக்கிறது.