சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors) அரசாங்கப் பங்குகளை வாங்குவதற்காக தேசியப் பங்குச் சந்தையானது (NSE - National Stock Exchange of India) “NSE GoBID” என்ற அலைபேசி செயலியையும் இணைய தளத்தையும் தொடங்கியுள்ளது.
இந்த தளமானது முதலீட்டாளர்கள் 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் கொண்ட கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்ய (T-bills) அனுமதி அளிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் 1 வருடம் முதல் கிட்டத்தட்ட 40 வருடங்கள் வரை அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யவும் அனுமதிக்கிறது.
NSE GoBID செயலியானது பதிவு செய்யப்பட்ட அனைத்து சில்லறை முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும்.