TNPSC Thervupettagam

NSS அமைப்பின் 75வது ஆண்டு விழா

February 13 , 2025 9 days 68 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSS) 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
  • 1950 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகத்தில் தேசிய மாதிரி ஆய்வு இயக்குநரகம் ஆனது நிறுவப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில், இந்த இயக்குநரகமானது அமைச்சரவை செயலகத்திற்கு மாற்றப் பட்டது.
  • 1970 ஆம் ஆண்டில், இது திட்டமிடல் அமைச்சகத்தின் புள்ளிவிவரத் துறையின் தேசியப் புள்ளிவிவரப் பணியின் ஒரு பகுதியாக மாறியது.
  • இது 1999 ஆம் ஆண்டு முதல் புதிதாக உருவாக்கப்பட்ட புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MOSPI) கீழ் உள்ளது.
  • இந்த அமைச்சகம் ஆனது இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவற்றுள் ஒன்று புள்ளியியல் தொடர்பானது மற்றும் மற்றொன்று திட்ட அமலாக்கம் தொடர்பானது ஆகும்.
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) எனப்படுகின்ற புள்ளியியல் பிரிவு ஆனது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
    • மத்தியப் புள்ளியியல் அலுவலகம் (CSO),
    • கணினி மையம் மற்றும்
    • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்