TNPSC Thervupettagam

NTPS – ஒரு நாடு ஒரு அனுமதிச் சீட்டு

January 2 , 2024 332 days 367 0
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, “ஒரு நாடு ஒரு அனுமதிச் சீட்டு” என்ற வகையிலான தேசிய சரக்குப் போக்குவரத்து அனுமதி அமைப்பை (NTPS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நாடு முழுவதும் மரம், மூங்கில் மற்றும் இதர வனப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது அந்தந்த மாநிலங்களின் போக்குவரத்து விதிகளின் அடிப்படையில் மாநில அரசுகளால் சரக்குப் போக்குவரத்து அனுமதிகள் வழங்கப் படுகின்றன.
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென சொந்த விதிமுறைகள் இருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி போக்குவரத்து அனுமதிச் சீட்டை ஒருவர் பெற வேண்டும்.
  • இந்த முழு செயல்முறையும் மிகவும் நேர விரயம் ஏற்படுத்தக் கூடியது என்பதால் மரம் மற்றும் வனப் பொருட்களை கொண்டு செல்வதில் தடைகள் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்