இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 100வது ஏவுதலை மேற்கொண்டது.
NVS-02 செயற்கைக்கோளுடன் கூடிய GSLV-F15 ஏவு கலமானது, விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
NVS-02 ஆனது, NVS தொடரின் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும்.
GSLV-F15 என்பது இந்தியாவின் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (GSLV) 17வது ஏவல் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோ எஞ்சின் என்ற நிலை கொண்ட 11வது ஏவுதலாகும்.
இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் நிலை கொண்ட GSLV வாகனத்தின் 8வது செயல்பாட்டு ஏவலாகும்.
இங்கு 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, முதல் முறையாக ரோகிணி தொழில்நுட்பச் சாதனத்தினைச் சுமந்து செல்லும் செயற்கைக்கோள் ஏவு வாகனம்-3 (SLV-3 E10) என்ற ஏவு கலத்தின் சோதனை ஏவல் ஆனது மேற்கொள்ளப்பட்டது.