ஐரோப்பிய ஒன்றியமானது சமீபத்தில் இரண்டு முக்கியச் சட்டங்களை அறிவித்து உள்ளது.
அவை நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட தொழில்துறைச் சட்டம் (NZIA) மற்றும் முக்கிய மூலப் பொருட்கள் சட்டம் (CRMA) ஆகும்.
2030 ஆம் ஆண்டிற்குள், உள்நாட்டு உற்பத்தி மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமைத் தொழில்நுட்பத் தேவைகளில் குறைந்தது 40 சதவீதத்தையாவதுப் பூர்த்தி செய்வதை நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட தொழில்துறை சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் எட்டு தொழில்நுட்பங்களானது "உத்திசார் நிகரச் சுழிய உமிழ்வுத் தொழில் நுட்பங்கள்" ஆக அடையாளம் காணப்பட்டுள்ளன:
முக்கிய மூலப்பொருட்களின் பிரித்தெடுத்தல், செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குளேயே மேற்கொள்ளுதல் என்ற இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியமானது முக்கிய மூலப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஒரு நிலையினைக் குறைக்கச் செய்வதை முக்கிய மூலப்பொருட்கள் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தெடுத்தல் செயல்முறைக்கான வருடாந்திர நுகர்வில் குறைந்தது 10 சதவிகிதம், செயலாக்கம் செய்வதற்கான நுகர்வில் 40 சதவிகிதம் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நுகர்வில் 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.