TNPSC Thervupettagam

OBCக்களின் துணை வகைப்பாட்டுக் குழு

March 23 , 2018 2312 days 873 0
  • மத்தியப் பட்டியலிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவின் (Other Backward Class – OBC) துணை வகைப்பாட்டிலுள்ள பிரச்சினைகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் இரண்டாவது மற்றும் இறுதி நீட்டிப்புக்கு மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இந்த நீட்டிப்பு 12 வார காலம் அதாவது ஜூன் 2018 வரை செல்லத் தக்கதாகும்.
  • இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 340ன் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இக்குழு அக்டோபர் 2, 2017 அன்று அமைக்கப்பட்டது.
  • இதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோகிணி ஆவார். இக்குழு அக்டோபர் 11, 2017 அன்று முதல் செயல்படத் தொடங்கியது. தற்போது இவ்வாணையம் OBC பிரிவினரைத் துணை வகைப்படுத்தும் மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநில பிற்படுத்தப்பட்ட நலவாரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்பிலுள்ளது.
  • இவ்வாணையத்தின் பணிகள்
    • பரந்த அளவில் OBC பிரிவிலும், குறிப்பாக மத்தியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள OBC பிரிவிலும் இணைக்கப்பட்டுள்ள சாதிகளுக்கான இடஒதுக்கீடுகளின் நியாயமற்ற விநியோகத்தின் (Inequitable Distribution of Benefits of Reservation) பயன்களின் அளவை ஆராய்தல்.
    • மத்தியப் பட்டியலில் உள்ளபடி, OBC பிரிவினரின் சாதி, துணை சாதி, வகுப்பு ஆகியவற்றை அடையாளம் காண்தல் மற்றும் அவர்களை முறையான துணை-வகைப்பாட்டில் வகைப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்