TNPSC Thervupettagam

ODF பிளஸ் கிராமங்கள்

September 29 , 2023 297 days 235 0
  • இந்தியாவில் உள்ள சுமார் 4.4 லட்சம் அல்லது 75 சதவீதக் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் என்ற அந்தஸ்தினை அடைந்துள்ளன.
  • திட அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளை நடைமுறைப் படுத்துவதோடு சேர்த்து, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) கிராமம் என்ற அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்ட கிராமம் 'ODF பிளஸ்' கிராமம் ஆகும்.
  • 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் (UT) உள்ள அனைத்து கிராமங்களும் ODF பிளஸ் அந்தஸ்தினை அடைந்துள்ள நிலையில் அவற்றில் நான்கு 'ODF பிளஸ் மாதிரி’ கிராமங்கள் என அறிவிக்கப் பட்டுள்ளன.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, லடாக், புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகியவை முழு அளவிலான ODF பிளஸ் கிராமங்களைக் கொண்ட சிறந்த மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகும்.
  • இவற்றில் அந்தமான் மற்றும் நிக்கோபார், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் தாமன் டையூ, ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம் ஆகியவை 'ODF பிளஸ் மாதிரி' அந்தஸ்தைப் பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்