TNPSC Thervupettagam

ODF+, ODF++ and நீர் பிளஸ்

March 20 , 2020 1863 days 1602 0
  • சமீபத்தில் நகர்ப்புற மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவானது மக்களவையில் தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (நகர்ப்புற) செயல்திறன் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
  • தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (நகரம் -2) அடுத்த நிலையின் கீழ் ODF+, ODF++ and நீர் பிளஸ் என்ற மூன்று நெறிமுறைகளின் பணிகளானது 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதன் உண்மை நிலைமை ஒதுக்கப்பட்ட காலக் கெடுவுடன் பொருந்த வில்லை.
  • ODF என அறிவிக்கப்பட்ட 4,320 நகரங்களில் 1,276 நகரங்கள் ODF + என சான்றளிக்கப் பட்டுள்ளன.
  • ODF ++ நகரங்களின் எண்ணிக்கையானது 411 ஆகும். அதாவது 10 சதவீதத்திற்கும் குறைவான நகரங்கள் இதுவரை ODF ++ என சான்றிதழ் பெற்றுள்ளன.
  • தூய்மை இந்தியாத் திட்டம் - நகர்ப்புறம் (Swachh Bharat Mission — Urban - SBM-Urban) என்ற திட்டத்தின் முதலாவது நிலையின் கீழ் ODF அங்கீகாரத்தை அடைந்த பின்னர் நகரங்கள் மேற்கொண்ட பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் அவற்றைப் பராமரிக்கவும் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ODF + மற்றும் ODF ++ ஆனது தொடங்கப் பட்டன.
  • ODF நெறிமுறைகளின் அடிப்படையில், ஒருமுறையாவது ODF சான்றிதழைப் பெற்ற நகரங்கள், தங்களை SBM - ODF+ & SBM - ODF++ என அறிவிக்கத் தகுதியுடையவை ஆகும்.
  • ODF+ ஆனது கழிப்பறைகளில் நீர், பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. ODF++ ஆனது கழிப்பறைகளில் கழிவுத் திரட்டு மற்றும் நச்சூட்டுப் பொருள் மேலாண்மை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நீர் பிளஸ் ஆனது தண்ணீரைச் சுத்திகரித்து, மறுபயன்பாடு செய்வதன் மூலம் கழிப்பறைகளைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஜல் சக்தி அபியானின் கீழ் உள்ள நீரின் பயன்பாடு குறித்த உரையாடல் மற்றும் மறுபயன்பாடு குறித்து மத்திய அரசு கவனம் செலுத்துவதற்குப் பங்களிக்கின்றது. இது தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்சிக்கான இலக்கு எண் 6 உடன் இணங்குகின்றது.
  • தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் முதலாவது நிலையின் கீழ், 99 சதவீத நகரங்கள் ODF நிலையை அடைந்துள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்