OECD அமைப்பின் சர்வதேச புலம்பெயர்வுக் கண்ணோட்ட அறிக்கை 2023
November 1 , 2023 389 days 335 0
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடுகளை நோக்கிய அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் OECD நாடுகளில் புதிதாக குடியேறுபவர்களின் முக்கியப் பூர்வீக நாடாக திகழ்ந்த சீனாவை இந்தியா விஞ்சியுள்ளது.
2021 ஆம் ஆண்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 0.41 மில்லியன் புதிய புலம் பெயர்ந்தோருடன் இந்தியா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
0.23 மில்லியன் புதிய புலம்பெயர்ந்தோருடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 2,00,000 புதிய புலம்பெயர்ந்தோருடன் ருமேனியா அடுத்த இடத்தில் உள்ளது.
38 உறுப்பினர் நாடுகளின் கூட்டமைப்பான OECD அமைப்பில் பல நாடுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கும் செல்வ வளம் மிக்க வளர்ச்சியடைந்த நாடுகள் ஆகும்.
2019 ஆம் ஆண்டு முதல் OECD நாடுகளில் குடியேறிய புதிய குடிமக்களின் முதன்மைப் பூர்வீக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உண்மையில் இது 15 சதவிகிதம் சரிவு ஆகும்.
1.3 லட்சம் இந்தியக் குடிமக்கள் 2021 ஆம் ஆண்டில் OECD அமைப்பு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.