TNPSC Thervupettagam

OECD அமைப்பின் சர்வதேச புலம்பெயர்வுக் கண்ணோட்ட அறிக்கை 2023

November 1 , 2023 261 days 270 0
  • 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடுகளை நோக்கிய அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் OECD நாடுகளில் புதிதாக குடியேறுபவர்களின் முக்கியப் பூர்வீக நாடாக திகழ்ந்த சீனாவை இந்தியா விஞ்சியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 0.41 மில்லியன் புதிய புலம் பெயர்ந்தோருடன் இந்தியா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • 0.23 மில்லியன் புதிய புலம்பெயர்ந்தோருடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 2,00,000 புதிய புலம்பெயர்ந்தோருடன் ருமேனியா அடுத்த இடத்தில் உள்ளது.
  • 38 உறுப்பினர் நாடுகளின் கூட்டமைப்பான OECD அமைப்பில் பல நாடுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கும் செல்வ வளம் மிக்க வளர்ச்சியடைந்த நாடுகள் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு முதல் OECD நாடுகளில் குடியேறிய புதிய குடிமக்களின் முதன்மைப் பூர்வீக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உண்மையில் இது 15 சதவிகிதம் சரிவு ஆகும்.
  • 1.3 லட்சம் இந்தியக் குடிமக்கள் 2021 ஆம் ஆண்டில் OECD அமைப்பு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்