TNPSC Thervupettagam

OECD அமைப்பின் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை

May 9 , 2024 70 days 162 0
  • OECD நாடுகளில் மொத்த பணவீக்கம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5% ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 6.9% ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 3.4% ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டின் இறுதியில், OECD நாடுகளின் பணவீக்கம் ஆனது பெரும்பாலான மத்திய வங்கிகளின் 2% என்ற இலக்குகளை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • G20 மற்றும் பிற வளர்ச்சி பெற்ற நாடுகளின் பெரும் வளர்ச்சியானது வளர்ந்து வரும் நாடுகளை விட கணிசமாகப் பின்தங்கியுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு 2024 ஆம் ஆண்டில் 0.4% மட்டுமே வளர்ச்சியைக் காணும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. அதன் வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 1% ஆக பதிவாகும்.
  • யூரோ பகுதியானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 0.7% மற்றும் 2025 ஆம் ஆண்டில் 1.5% வளர்ச்சியைக் காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சி இந்த ஆண்டு 0.7% ஆக இருக்கும் ஆனால் 2025 ஆம் ஆண்டில் 1.3% வளர்ச்சியுடன் யூரோ பகுதியில் பிரான்சு பின்தங்கக்கூடும்.
  • இதேபோல், இத்தாலியும் இந்த ஆண்டு 0.7% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது 2025 ஆம் ஆண்டில் 1.2% ஆக உயரும்.
  • ஐரோப்பாவின் "நலிவுற்ற நாடாக" நீண்ட காலமாகக் கருதப்படும் ஜெர்மனி, மிகவும் மிதமான 0.2% என்ற வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியா 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டிலும் சுமார் 6.6% என்ற நிலையான விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, அதே நேரத்தில் இந்தோனேசியா 2024 ஆம் ஆண்டில் 5.1% உயர்வினையும், 2025 ஆம் ஆண்டில் 5.2% உயர்வினையும் காணும்.
  • இருப்பினும், சீன நாட்டின் வளர்ச்சி இந்த ஆண்டு சுமார் 4.9% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, ஆனால் இது அடுத்த ஆண்டு 4.5% ஆக மட்டுமே பதிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்