இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC - Organisation of Islamic Cooperation) கவுன்சிலின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 46-வது அமர்வு அபுதாபியில் நடைபெற்றது.
OIC-ன் ஒரு சந்திப்பிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு 1969 ஆம் ஆண்டு OIC-ன் சந்திப்பிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக இந்தியாவிற்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற OIC வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பின் போது இந்தியாவிற்கு பார்வையாளர் தகுதி நிலை வழங்க கத்தார் பரிந்துரைத்தது.
இந்த அமர்வானது அபுதாபி உறுதி ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
2016 ஆம் ஆண்டு தாஷ்கண்ட் உறுதி ஆவணத்திற்குப் பின்பு உறுதி ஆவணத்தில் காஷ்மீர் பிரச்சனை இடம் பெறாதது இது இரண்டாவது முறையாகும்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது ஐக்கிய நாடுகளை அடுத்த அளவில் 2-வது மிகப்பெரிய அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
இது 4 கண்டங்களிலிருந்து 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
இது 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மொராக்கோவில் நடைபெற்ற ராபட் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி உருவாக்கப்பட்டது.
இது 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மெக்கா மாநாட்டில் “பத்து ஆண்டு நடவடிக்கைத் திட்டம்” என்று அழைக்கப்பட்ட செயல்திட்டத்தை சமர்ப்பித்தது.
புதிய திட்டமான OIC-2025 ஆனது 107 இலக்குகளுடன் 18 முதன்மைப் பகுதிகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.