TNPSC Thervupettagam

OIC-ன் 46-வது அமர்வு

March 4 , 2019 2095 days 598 0
  • இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC - Organisation of Islamic Cooperation) கவுன்சிலின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 46-வது அமர்வு அபுதாபியில் நடைபெற்றது.
  • OIC-ன் ஒரு சந்திப்பிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • இதற்கு முன்பு 1969 ஆம் ஆண்டு OIC-ன் சந்திப்பிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக இந்தியாவிற்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற OIC வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பின் போது இந்தியாவிற்கு பார்வையாளர் தகுதி நிலை வழங்க கத்தார் பரிந்துரைத்தது.
  • இந்த அமர்வானது அபுதாபி உறுதி ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
  • 2016 ஆம் ஆண்டு தாஷ்கண்ட் உறுதி ஆவணத்திற்குப் பின்பு உறுதி ஆவணத்தில் காஷ்மீர் பிரச்சனை இடம் பெறாதது இது இரண்டாவது முறையாகும்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
  • இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது ஐக்கிய நாடுகளை அடுத்த அளவில் 2-வது மிகப்பெரிய அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • இது 4 கண்டங்களிலிருந்து 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • இது 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மொராக்கோவில் நடைபெற்ற ராபட் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி உருவாக்கப்பட்டது.
  • இது 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மெக்கா மாநாட்டில் “பத்து ஆண்டு நடவடிக்கைத் திட்டம்” என்று அழைக்கப்பட்ட செயல்திட்டத்தை சமர்ப்பித்தது.
  • புதிய திட்டமான OIC-2025 ஆனது 107 இலக்குகளுடன் 18 முதன்மைப் பகுதிகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்