TNPSC Thervupettagam

OIML சான்றிதழ் வழங்கும் ஆணையம்

September 19 , 2023 307 days 200 0
  • இந்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சட்டமுறை அளவியல் பிரிவானது, சர்வதேச சட்டமுறை அளவியல் அமைப்பின் (OIML) சான்றிதழ் வழங்கும் ஆணையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • OIML என்பது சர்வதேச சட்டமுறை அளவியல் அமைப்பாகும்.
  • 1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பாரீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • OIML என்பது ஒரு சர்வதேச தரநிலை நிர்ணய அமைப்பாகும்.
  • இது சட்டமுறை அளவியல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினரின் பயன்பாட்டிற்காக மாதிரி விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை உருவாக்குகிறது.
  • இந்தியா 1956 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் உறுப்பினரானது.
  • அதே ஆண்டில், இந்தியா அளவைகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
  • இதுவரை 13 நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அண்டை நாடுகளும் உற்பத்தியாளர்களும் தங்கள் சான்றிதழைப் பெற இந்தியாவினை நாடலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்