TNPSC Thervupettagam
March 8 , 2019 1963 days 534 0
  • தில்லி அரசு “ONE Delhi” என்ற ஒரு பயணத் திட்ட கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்ற பல்வேறு அரசுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளுவதற்கு திட்டமிட இது பயன்படுத்தப்படுகிறது.
  • இதற்கு முன்பு தில்லி அரசு ONE Delhi அட்டை என்ற பொதுப் போக்குவரத்து அட்டையைத் தொடங்கியது. இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது செயலியுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.
  • இந்தச் செயலியானது பின்வரும் வசதிகளை அளிக்கிறது:
    • மெட்ரோக்கள் மற்றும் பேருந்துகளுக்கான தோராயமான பயண நேரத்தை அளிக்கும்.
    • பேருந்துகள் மற்றும் மெட்ரோக்களின் நிகழ்நேர இருப்பிடத்தை அடையாளம் கண்டிட உதவும்.
    • பயணக் கட்டணம் தொடர்பான தகவல்களை அளிக்கும்.
    • இரண்டு இடங்களுக்கிடையே சிறந்த பயண முறைமை மற்றும் சிறந்த வழித்தடத்தை அளிக்கும்.
    • தில்லியில் உள்ள சுற்றுலாத் தளங்களின் பட்டியலை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்