பாரதி நிறுவனத்தின் ஆதரவு பெற்ற OneWeb என்ற நிறுவனமானது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 40 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
இது OneWeb நிறுவனத்தின் 16வது ஏவுதலைக் குறிக்கிறது.
இந்த நிறுவனம் அதன் முதல் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த செயற்கைக் கோள் தொகுப்பினை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு ஏவுதல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இவை விண்ணில் ஏவப்பட்டதன் மூலம், OneWeb நிறுவனமானது விண்வெளியின் சுற்றுப் பாதையில் மொத்தம் 542 செயல்பாட்டுச் செயற்கைக் கோள்களைக் கொண்டு உள்ளது.
இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ள மொத்தமான 648 செயற்கைக் கோள்களில் இது 83 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இந்த நிறுவனத்தின் செயற்கைக்கோள் வலையமைப்பானது முழுமையாக நிலை நிறுத்தப் பட்டவுடன், OneWeb நிறுவனமானது ஸ்டார்லிங்க் போன்று, புவியின் தாழ் மட்ட செயற்கைக் கோள்களின் தொகுப்பினைப் பயன்படுத்தி குறைந்த தாமத வரம்பு கொண்ட அதிவேகச் செயற்கைக் கோள் வழியிலான இணையச் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.