TNPSC Thervupettagam

ONOE நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள்

October 4 , 2024 20 hrs 0 min 64 0
  • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான (ஒரே நாடு ஒரே தேர்தல்) திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக என்று, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இரண்டு மசோதாக்கள் உட்பட மூன்று மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
  • முன்மொழியப்பட உள்ள இந்த மசோதாவானது, ‘நியமிக்கப்பட்ட தேதி’ தொடர்பான (1)வது உட்பிரிவினைச் சேர்ப்பதன் மூலம் 82A என்ற சரத்தினைத் திருத்த முற்படும்.
  • மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளை ஒன்றாக நிறைவு செய்வது தொடர்பான 82Aவது சரத்தில் (2)வது உட்பிரிவினைச் சேர்க்க முயல்கிறது.
  • 83(2)வது சரத்தினைத் திருத்தவும், மக்களவையின் பணிக் காலம் மற்றும் கலைப்பு தொடர்பான (3) மற்றும் (4)வது புதிய உட்பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கும் இந்த மசோதா முன்மொழியும்.
  • சட்டப் பேரவைகளைக் கலைப்பது மற்றும் ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துதல்’ என்ற சொல்லைச் சேர்ப்பதற்கு 327வது சரத்தினைத் திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் இருக்கும்.
  • இரண்டாவது மசோதாவானது 324A என்ற புதிய சரத்தினைச் சேர்ப்பதன் மூலம் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சில விதிமுறைகளை உருவாக்கும்.
  • இந்த மசோதாவுக்கு குறைந்தபட்சம் 50% மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய சட்டப் பேரவைகளைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களைக் கையாளும் மூன்று சட்டங்களில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கான மூன்றாவது மசோதாவானது ஒரு சாதாரண சட்டத் திருத்த மசோதாவாக முன் வைக்கப்படும்.
  • முதல் அரசியலமைப்புத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட படி இந்த அவைகளின் விதிமுறைகளை மற்ற சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையுடன் ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டிருக்கும்.
  • டெல்லியின் தேசியத் தலைநகரப் பிரதேச அரசு சட்டம்-1991, ஒன்றியப் பிரதேச அரசு சட்டம்-1963 மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019 ஆகிய சட்டங்களை திருத்துவதற்கு இந்த மசோதா முன்மொழியும்.
  • அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற, அவையில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத சிறப்பு பெரும்பான்மை தேவைப்படும்.
  • எனவே, அரசுக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை, ஆனால் மக்கள் அவையில் ஆளுங்கட்சிக்கு 292 உறுப்பினர்களே உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்