TNPSC Thervupettagam

OPEC - ஆசியன் பிரிமியம் விவகாரம்

April 24 , 2018 2310 days 1243 0
  • எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பினால்  (OPEC - Organisation of the Petroleum Exporting Countries)  விதிக்கப்படும் ஆசியன் பிரிமியத்திற்கு (Asian premium )  எதிராக குரல் எழுப்ப இந்தியாவும் சீனாவும்  பிற ஆசிய நாடுகளுடன் ஒருங்கிணைந்துள்ளன.
  • மேற்கத்திய நாடுகளுக்கு தான் விற்கின்ற எண்ணெய்யினுடைய விற்பனை விலையை ஒப்பிட்டு, ஆசிய நாடுகளிடமிருந்து OPEC அமைப்பின்   உறுப்பு நாடுகள் வசூலிக்கின்ற ஓர் கூடுதல் கட்டணமே ஆசியன் பிரிமியமாகும்.
  • இந்தியாவானது தனது 86 சதவீத கச்சா எண்ணெய்யையும், 95 சதவீத இயற்கை எரிவாயுவினையும், 95 சதவீத திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவையும் (LPG - Liquefied petroleum gas) எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளிலிருந்து   இறக்குமதி செய்கின்றது.
  • எண்ணெய் உற்பத்தி நாடுகளின் “பொறுப்புடைய மற்றும் நியாயமான விலையிடலின்” (Responsible and Reasonable Pricing’) அமல்பாட்டினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு

  • எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதியாளர் நாடுகளின் கூட்டமைப்பானது 1960 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில்  அமைந்துள்ளது.
  • சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், வெனிசூலா ஆகிய 5 நாடுகள் OPEC அமைப்பின் முதல் ஐந்து நிறுவன நாடுகளாகும்.
  • OPEC அமைப்பானது 14 எண்ணெய் ஏற்றுமதியாளர் நாடுகளின் அரசுகளுக்கிடையேயான (intergovernmental organization) ஓர் அமைப்பாகும்.
  • OPEC அமைப்பானது தன்னுடைய உறுப்பு நாடுகளினுடைய பெட்ரோலியக் கொள்கைகளை (petroleum policies) ஒன்றிணைத்து ஒருங்கிணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்