பிரேசில் நாட்டின் அரசாங்கம் ஆனது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஒரு குழுவான OPEC+ குழுவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
OPEC+ குழுவானது, 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த அமைப்பில் இணையுமாறு அதிகாரப்பூர்வமாக பிரேசில் அரசிற்கு அழைப்பு விடுத்தது.
பிரேசில் நாடு ஆனது ஒரு நாளைக்கு சுமார் 4.32 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்வதுடன், தென் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெயினை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
தினமும் சுமார் 22 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்வதுடன், அமெரிக்கா உலகின் மிகப்பெரியதொரு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ள நிலையில் சவுதி அரேபியா ஆனது சுமார் 11 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியுடன் இந்த OPEC குழுவில் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.