TNPSC Thervupettagam

OPEC நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள்

May 11 , 2023 563 days 276 0
  • இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கமான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) பங்கு ஆனது, ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு 46 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நாடுகள், குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளானது, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய நாட்டினால் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்துக் கச்சா எண்ணெயில் 72 சதவீதப் பங்கைக் கொண்டிருந்தன.
  • இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா தொடர்ந்து இருந்து வருகிறது.
  • ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய் அளவானது, ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் அளவினை விட தற்போது அதிகமாக உள்ளது.
  • இந்த இரண்டு நாடுகளும், கடந்தப் பத்தாண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடுகளாக  இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்