OpenAI நிறுவனம் ஆனது, உரை, காட்சி மற்றும் ஒலி ஆகியவற்றின் திறன்கள் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் கூடியதாக ChatGPT என்ற உரையாடு மென் பொருளினை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அதன் GPT-4 மாதிரியின் புதிய மறு வடிவமான GPT-4o அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உரை, ஒலி மற்றும் ஒளிப்படம் ஆகியவற்றின் அதிகரித்த வேகம் மற்றும் நிகழ்நேர பகுத்தறிதல் திறனை வழங்குகிறது.
இது வாய்மொழி பதில்களில் மனித நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு திறன்களையும், மனிதர்களின் மனநிலைகளைக் கண்டறியும் திறனையும் அறிமுகப்படுத்துகிறது.