OpenAI நிறுவனமானது, அதன் Sora எனப்படும் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரியினை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது விரவல் நிலைமாற்றி (DiT) மூலம் இயக்கப் படுகிறது.
இது எதிர்காலத்தில் திரைப்படத் தயாரிப்பு முறையினை மாற்றியமைக்கக் கூடிய ஒளிப்படக் காட்சியை உருவாக்கும் திறன்களைக் கொண்டுள்ளது.
DiT என குறிப்பிடப்படும் விரவல் நிலைமாற்றி என்பது நிலைமாற்றிக் கட்டமைப்பின் அடிப்படையிலான விரவல் மாதிரிகளின் வகுப்பாகும்.
DiT ஆனது Sora மாதிரிக்கு, உரை உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, சிறிது சீரற்றத் தன்மையைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் உரையின் அடிப்படையில் உள்ளீடுகளைச் சரி செய்வதன் மூலமும் முறையான ஒளிப் படக் காட்சிகளை உருவாக்க உதவுகிறது.